அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலுார்: அரியலுார் அருகே, டாடா ஏசி லோடு ஆட்டோ மீது, பல்கர் லாரி மோதிய விபத்தில் 9 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.அரியலுார் மாவட்டம், கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த 22 பேர், புதுக்குடி கிராமத்துக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதற்காக ஒரு டாடா ஏசி லோடு ஆட்டோவில் சென்று விட்டு, நேற்று இரவு 9: 00 மணியளவில் மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆட்டோ கச்சிபெருமாள் கிராமம் அருகே வந்தபோது, வி.கைகாட்டியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சிமெண்ட் தயாரிக்க பயன்படும் பவுடர் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த பல்கர் லாரி லோடு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராஜகுமாரி,55, முனியம்மாள்,60, காசியம்மாள்,45, காமாட்சி,45, ராணி,40, சித்ரா,30, செந்தாமரை,50, சரஸ்வதி,50, செல்வி,40, மருதபாண்டி,32, மணிகண்டன்,25, ஆகிய 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-