அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய், செப்-23
குரங்கு(கள்) கையில் சிக்கிய பூமாலையாய் சகட்டுமேனிக்கு பீய்த்து எரியப்பட்டிருக்கும் சிரிய தேசமும், அதன் மக்களும் நித்தமும் அனுபவித்து வரும் கொடுமைகள் எழுத்தில் அடங்காதவை.

பஷார் அல் அசாத் எனும் கொடியவனின் ராணுவம் தன் நாட்டு மக்களுக்கு எதிராக நிகழ்த்தும் கொடுமைகளுடன், சிரியாவை ஐ.எஸ் அமைப்பிடமிருந்து காப்பாற்றப் போவதாக சொல்லிக் கொண்டு சிரியாவின் பொதுமக்களை கொன்று குவிக்கும் ரஷ்யாவும் ஒருபுறம்.

அதே ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து சிரிய மக்களை காக்கப்போவதாக நாடகமாடி தன் பங்குக்கும் அக்கிரமங்களை செய்து வரும் அமெரிக்கா மற்றும் அவர்களின் ஆதரவுடன் தன்னாட்டு விடுதலைக்காக களத்தில் சமர் புரியும் சின்னஞ்சிறு குழுக்கள் இன்னொரு புறம் என ஆளாளுக்கு பொதுமக்களை பந்தாடி வருகின்றனர். விளைவு உயிர் பிழைத்தால் போதும் என ஐரோப்பிய நாடுகளை நோக்கி ஓடும் வழியில் கடலில் கொத்துக்கொத்தாய் மடிந்தது போக எஞ்சியவர் சென்றால் அங்கும் நாயினும் கீழாக நடத்தப்பெறும் அப்பாவி சிரிய மக்கள்.

இதற்கிடையில், விரும்பியும் விரும்பாமலும் அடைக்கலம் தரும் நாடுகளிலேயே சில நேரம் இஸ்லாத்தையும் ஜிஹாதையும் தவறாக புரிந்து கொண்டவர்கள் செய்யும் வன்முறையால் அகதி வாழ்வும் கேள்விக்குறியாகும் அவலம்.

இதில் நம்ம நாட்டு காவிகளைப் போல் இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளே பல நாடுகளில் தாக்குதல் நடத்திவிட்டு முஸ்லீம்கள் மீதே ஊடக பலத்தால் பழிசுமத்தி உலகளவில் வெறுப்புணர்வை தூண்டிவிடும் கேடுகெட்டத்தனம் என அகதிகள் பந்தாடப்பட்டு வருகின்ற இந்நிலையில்,

நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெற்ற அகதிகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட அமீரகத்தின் சர்வதேச நல்லுறவுகளுக்கான அமைச்சர் திருமதி ரீம் இப்ராஹிம் அல் ஹஷீமி பேசும் போது, சிரியா அகதிகள் 15000 பேர்களை அமீரகம் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் என உறுதியளித்தார்.

சிரியா பிரச்சனை தோன்றுமுன் சுமார் 115,000 சிரியர்கள் அமீரகத்தில் வாழ்ந்து வந்ததையும் தற்போதும் 123,000 சிரியர்கள் அமீரகத்தில் தங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அகதிகள் பிரச்சனையை மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் சர்வதேச பிரச்சனையாக கருதி அவர்களின் துயர் துடைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 750 மில்லியன் டாலர் அளவுக்கு அமீரகம் சிரிய அகதிகளுக்கு செய்துள்ள உதவிகளுடன் சிரியாவை சுற்றியுள்ள நாடுகளான ஜோர்டான், வடக்கு ஈராக் மற்றும் கிரீஸ் நாடுகளில் அமீரகம் ஏற்படுத்தித் தந்துள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு கூடாரம், உணவு, தண்ணீர், அடிப்படை சுகாதார வசதிகள், துப்புரவு போன்ற அடிப்படை வசதிகளுடன் மறுவாழ்வு, கல்வி, மன நல ஆலோசணைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி போன்றவற்றை வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-