அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது வரும் என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த கேள்வியை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கன்ஹையா லால் என்பவர் எழுப்பியுள்ளார். அவர் தனது மனுவில், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணம் கொண்டுவரப்பட்டு ஏழை மக்களின் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பாஜக ஆட்சி பதவியேற்று வருடங்கள் கடந்தும் அதுகுறித்த எந்தத் தகவலும் இல்லை. எப்போது அந்த ரூ.15 லட்சம் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்குப் 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை தகவல் ஆணையர் ராதா கிருஷ்ணா மத்தூர், பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-