அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துல்ஹஜ் மாதத்தின் பிறை சம்மந்தமான அதிகாரப் பூர்வமாண அறிவிப்புகள் 🌙🌙
1⃣ ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), சவூதி அரேபியா கத்தார்,குவைத்,பக்ரைன், மஸ்கட்,போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் துல்ஹஜ் மாத தலைப்பிறை நேற்று முன் தினம் மாலை பிறை தென்படாததால் இன்ஷா அல்லாஹ் இன்று சனிக்கிழமை 03-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.

.

ஆகையால் மத்திய கிழக்கில் ஹஜ்ஜுபெருநாள் 12-09-2016 திங்கட்கிழமை கொண்டாடப்படுமென என அந்நாட்டின் பிறை கமிட்டிகள் அறிவித்துள்ளன.
2⃣ மலேசியாவில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று மாலை தென்பட்டதால் இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 03-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் எனவும் ஹஜ்ஜுப்பெருநாள் 12-09-2016 திங்கட்கிழமை கொண்டாடப்படுமென மலேசிய அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் அதிகார பூர்வமான அறிவித்துள்ளது.
3⃣ இலங்கையில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று மாலை தென்பட்டதால் இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 03-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் எனவும் ஹஜ்ஜுப்பெருநாள் 12-09-2016 திங்கட்கிழமை கொண்டாடப்படுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
4⃣ தமிழ்நாட்டில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 04-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.

.

ஆகையால் தமிழ்நாட்டில் ஹஜ்ஜுப்பெருநாள் 13-09-2016 செவ்வாய்கிழமை கொண்டாடப்படுமென தமிழ்நாடு காஜி அறிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-