அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  |

வாஷிங்டன்: அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘ஜஸ்டா’ சட்டத்துக்கு அதிபர் ஒபாமா தடை விதித்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். இந்த அமைப்புக்கு சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியாவுக்கும் பங்கு உண்டு, என்பதால் செப்.11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வகையில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான சட்டம்(ஜஸ்டா) குடியரசு கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தால் தங்கள் நாடு மீது தீவிரவாத முத்திரை விழும் என்பதால் இதற்கு சவுதி அரேபியா எதிர்ப்பு தெரிவித்தது. இச்சட்டம் அமெரிக்க நலனுக்கு பலவகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதை அதிபர் ஒபாமா, தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் அவர் கூறியதாவது: ஜஸ்டா சட்டம் மூலம் செப்.11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால், வெளிநாடுகளுக்கு எதிராக வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வெளிவரும். இச்சட்டத்தால் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க நீண்டகாலமாக பின்பற்றிய விதிமுறைகள் மற்றும் வழக்கங்களை கைவிட வேண்டியிருக்கும்.

வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் சட்ட ரீதியான பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்படும். அமெரிக்க நட்பு நாடுகளின் உறவுகள் பாதிக்கப்படும். மொத்தத்தில் இச்சட்டம் அமெரிக்க நலனுக்கு எதிராக உள்ளது. தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க இது வலுவான வழிமுறை அல்ல. இவ்வாறு ஒபாமா கூறினார்.

டிரம்ப் எதிர்ப்பு

அதிபர் ஒபாமாவின் வீட்டோ முடிவை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ‘‘ஜஸ்டா சட்டத்தை அதிபர் ஒபாமா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துள்ளது வெட்கக்கேடு. அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், செப்.11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும். இதை ஒபாமா தடுத்துள்ளது அவமானம். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இது போன்ற சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பேன்’’ என்றார்.-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-