அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மெயின் ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரே மளிகைக்கடை நடத்தி வருபவர் ராஜா. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்ற போது, கடையின் பின்பக்க சுவரில் ஓட்டை போடப்பட்டு இருந்தது. மேலும் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடையில் நடந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-