அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது.
அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது.
குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது.
கலிமா மொழிந்து ஏக இறைவனை ஏற்று இஸ்லாமிய பெண்ணாக மாறினார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்தார். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு இது வரை கிட்டத்தட்ட ஆயிரம் பேரை அழைத்து வந்து இஸ்லாமியர்களாக மாற்றியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெல்ஜிய படித்த பெண்மணிகள்.
பெல்ஜியத்தில் ஏறத்தாழ 450,000 முஸ்லிம்கள் உள்ளனர். மொராக்கோ மற்றும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்களாக உள்ளனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பெல்ஜியத்தில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர்.
பிரஸ்ஸல்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 77 பள்ளிவாசல்கள் உள்ளன. பெல்ஜியம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஏக இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாத்திகமும் கம்யூனிஷமும் தங்கள் வாழ்வில் நிம்மதியை தரவில்லை என்பதால் இன்று இந்த மக்கள் தங்கள் பார்வையை இஸ்லாத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-