அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
:
துபாய், செப்-27
துபாயின் துணை ஆட்சியாளரும், நிதி அமைச்சரும், துபாய் நகராட்சியின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூமின் ஒப்புதலை தொடர்ந்து துபாயின் அல் கவானீஜ் பிரதேசத்தில் 60 ஹெக்டேர் பரப்பளவில் 100 மில்லியன் திர்ஹம் செலவில் குர்ஆன் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

கண்ணாடி மாளிகையினுள் சுமார் 12 பூங்கா தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. அவை அனைத்தும் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளை கொண்டே அமைக்கப்படுவதுடன் அதனுடைய மருத்துவ, விஞ்ஞான தகவல்களையும் இடம்பெறச் செய்வதுடன் அத்தகைய மரம், செடி, கொடிகளையும், அதிலிருந்த தயாரிக்கப்படும் மருத்துவ பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. அத்துடன் நவீன உலகிற்கு அவற்றின் தேவையை பற்றியும் எடுத்துச் சொல்லப்படும்.

அல் குர்ஆன் மற்றும் நபி மொழியில் காணப்படும் மரம், செடி, கொடிகள் குறித்த அறிவியல் தகவல்களை சேகரித்து அதன் மூலம் இஸ்லாமிய கலாச்சாரங்கள் எவ்வாறு வெவ்வேறு கலாச்சாரங்கள் கலாசாரத் தொடர்புகளை இணைக்கும் உறவுப்பாலமாக பயன்படுகிறது என்பது குறித்தும் விளக்கப்படும்.

மேலும் இங்கே அமைக்கப்படும் செயற்கை அற்புதக் குகையினுள், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கூறும் பல்வேறு அற்புதங்களை இன்றைய தொழிற்நுட்ப உதவி கொண்டு காட்சி வடிவில் நம் கண் முன்னே நடப்பது போன்றே காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்ப்பதுடன் அவர்களுக்கு தேவையான குர்ஆனிய விளக்கங்களும் அங்கு வழங்கப்படும்.

பூங்காவை சுற்றி அமைக்கப்படும் மின்தகடு பொருத்தப்பட்டுள்ள செயற்கை மரங்களில் அழகிய காலிகிராப் வேலைபாடுகள் (Calligraph) செய்யப்படுவதுடன் மின்னுற்பத்தி, மொபைல் போன் சார்ஜர், வைபை வசதியுடன் அதன் கீழ் இளைப்பாரும் இருக்கைகள் என ஜமாய்த்திடவும் திட்டமிடப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-