அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய், ஆகஸ்ட் 11
துபாயில் சாலையோர வாகன நிறுத்தங்களுக்கும் கட்டணம் செலுத்தி அதற்கான பார்க்கிங் டிக்கெட்டுகளை டேஷ்போர்டுகள் மேல் ஆய்வாளர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்பது விதி. இங்கே தான் நம்ம இந்திய டிரைவர் ஒருவர் தன் அதிபுத்திசாலிதனத்தை காட்டி பிடிபட்டுள்ளார்.

20 ஆம் தேதியன்று பார்க்கிங் ஆய்வாளர் அல் பரஹா பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது 21 ஆம் தேதி என பசைவைத்து ஒட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டிருந்த டிக்கெட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அதை போட்டோ எடுத்து தனது மேலதிகாரியிடம் தெரிவித்துள்ளார் ஆனால் மேலதிகாரி வருவதற்குள் டிரைவர் வண்டியுடன் எஸ்கேப்.

பிறகு 3 நாட்கள் கழித்து அந்த ஆய்வாளர் மீண்டும் வந்த போது அதே கார் 23 ஆம் தேதியன்று 24 ஆம் தேதி கார் பார்க்கிங் டிக்கெட்டுடன் நின்றுள்ளது. இந்த முறை முந்திக் கொண்ட ஆய்வாளரும் மேலதிகாரியும் டிரைவரை காருடன் பிடித்து சோதனையிட, டிரைவர் தம்பி இப்பொ கம்பி என்றாரு ஆனாலும் தீர்ப்பு வரும் அக்டோபர் 11 ஆம் தேதி தான்.

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-