அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்:

   Visa நடவடிக்கை எளிதாக்கவும் காலதாமதத்தை தவிர்க்கவும் ஈ விசா சேவை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது குவைத் அரசு.குவைத் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் உங்கள் Passport Copy-யும் பதிவேற்ற வேண்டும்.
   நீங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்து
Upload செய்தால். உங்கள் Mail Id-க்கு ஒரு குறுந்தகவல் வரும்.நீங்கள் விண்ணப்பித்த
Visa விண்ணம் பற்றி குவைத் தொழிற்துறை அமைச்சகம் 24 மணிநேரத்தில் முடிவெடுக்கும். உங்கள் கல்வி தகுதி மற்றும் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் குவைத் தொழிற்துறை அமைச்சகம் தங்கள்
விண்ணப்பம் பற்றிய  இறுதி முடிவு எடுக்கும்.
     உங்களுக்கு Visa அனுமதிக்கலாம் என்று
அமைச்சகம் முடிவு எடுத்தால் ஒரு Reference Number உங்கள் Mail ID-க்கு அனுப்புவார்கள்.
   உங்கள் பக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் Visa processing Centre-யில் இந்த Reference number கொடுக்கும் போது
 உங்களுக்கு உங்களுக்கு அனுமதித்த Visa-வின் நகல் கிடைக்கும்.
   இதன் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகளை எளிதாக முடித்து குவைத்தில் வேலைக்கு வர முடியும். இதன் மூலம் காலதாமதம் மற்றும் போலி ஏஜெண்டுகளிம் இருந்து மக்கள் தங்களை எளிதில் காத்துகொள்ள முடியும்.
    57 நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு 14 பிரிவுகளில் இதன் மூலம் முதல் கட்டமாக
எளிதில் வேலை பெற முடியும்.
  மிக விரைவில் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும்  தொழிலாளர்களுக்கு இதன்
Visa-விற்கு விண்ணபிக்க முடியும்.
     வரும் வருடங்களில் பயனாளிகள் விண்ணபித்து ஒரு மணிநேரத்தில் Visa கிடைக்க இதை அதி நவீனப்படுத்தப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-