அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபை 26 ஆகஸ்ட்,

துபையின் சமூக நல அபிவிருத்தி ஆணயமும் (The Community Development Authority - CDA) & Al Obaidli and Al Zarouni Advocates and Legal Consultants office எனும் தனியார் சட்ட ஆலோசணை குழுவினரும் இணைந்து 'Legal Clinic' எனும் இலவச சட்ட ஆலோசணை மையத்தை அனைத்து துபைவாசிகளுக்காக ஏற்படுத்தியுள்ளனர்.

வழக்கறிஞர்களை பொறுத்து 750 திர்ஹம் முதல் 5000 திர்ஹம் வரை சட்ட ஆலோசணைகளுக்காக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் குழந்தைகள் பாதுகாப்பு (Child Protection Act) மற்றும் தனிமனித உரிமை சட்டங்கள் (Personal Status Law) குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்பட இந்த Legal Clinic எனும் இலவச சட்ட ஆலோசணை மையங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திருமணம், விவாகரத்து, தனித்துவம் (identity), சொத்து விவகாரங்கள் (inheritance), குழந்தைகள் விவகாரம் (child support) என குடும்ப விஷயங்கள் குறித்து ஆலோசணை தரப்படும் என்று 'அல் ஒபைதலி மற்றும் அல் ஜரூனி வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசணை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்னும் பல சட்ட அலுவலகங்களையும் இத்திட்டத்தில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் சமூக நல அபிவிருத்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக நல அபிவிருத்தி ஆணையத்தை சிறியதொரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் வழியாக அனுப்புவதன் மூலம் அல்லது அதற்கான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்வதன் வழியாக வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசணை மையத்திலிருந்து தேவையான ஆலோசணைகள் பெற்றுத் தரப்படும்.

இலவச சட்ட ஆலோசணை தொடர்புகளுக்கு:

Legal Clinic (for all residents of Dubai)

Hotline: 800-3232 / email: legalclinic@cda.gov.ae
நன்றி: அதிரை நியூஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-