அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய், ஆகஸ்ட் 14
நம்ம பெரம்பலூர் பக்கத்தில் உள்ளதோர் கிராமம் '
சின்னமுட்லு'. உங்களைப் போன்ற ஆர்வலர்களால் மட்டுமே இந்தப் பெயரை தமிழ் சொற்சுவையுடன் ரசித்து வாசித்து அழகிய கவிதையாய் உணர முடியும்.

பணம் தண்ணீராய் பாய்ச்சப்பட்டு ஒர் பூஞ்சோலையாய் அரபு தீபகற்ப பாலைவன மண் மிளிர்வதையும் அதில் துபாயும் தன்னை பசுமையாக்கிக் கொள்வதில் முன்னனியில் உள்ளதை அறிவோம்.

தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் என அழைக்கப்படுகின்ற மழைக்காடுகளில் நாம் சுவாசித்திருப்போம். உதாரணமாக ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, குற்றாலம், தேக்கடி, ஆணைமலை போன்ற பகுதிகளில் சாரலில் நனைந்த பசுமை நினைவுகளை அசைபோட்டுப் பாருங்கள்!

இயற்கையை ரசிக்கும் ரசனையுள்ள உங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் துபாயிலும் ஓர் செயற்கை  
சின்னமுட்லு அதுவும் ஒர் ஹோட்டலின் மாடியில் 75000 சதுரடி பரப்பளவில் சுமார் 2 பில்லியன் டாலர் செலவில் பல்வேறு வசதிகளுடன் உருவாகிறதென்றால் நெஞ்சில் ஒர் ஜில்லிப்பு உண்டாவதை உணர்கிறீர்களா?

2018 ஆம் ஆண்டில் திறக்கும் திட்டத்துடன் உருவாகும் இந்த மழைக்காட்டில் அமேசான் காடுகளிலிருந்து கொண்டு வந்து நடப்படும் மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் உங்களை வரவேற்கும் இயந்திர மனிதர்கள், உலவும் இயந்திர டைனோசர்கள், கொட்டும் சாரல் மழை, காட்டிலிருப்பதைப் போன்ற நீர் தாடகங்கள், செயற்கை கடற்கரை, தொட்டுத் தழுவிச் செல்லும் வெண்பனி மூட்டம் என நிலவும் இவை அனைத்தையும் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்தி நிறுவவுள்ளனர்.

சுமார் 5 டிகிரி அளவில் குளிர்நிலவும் இந்த செயற்கை மழைக்காட்டில் உணவகங்கள், தேநீர் விடுதிகள், குழந்தைகள் விளையாடுமிடங்கள், வெந்நீர் நீரூற்றுக்கள், ஓய்வு நாற்காலிகள் என்பதுடன் காடுகளுக்கு மேல் பல வண்ணஜாலங்கள் நிகழ்த்தும் செயற்கை வானமும் அமைக்கப்பட உள்ளதாம் துபாய் அல் பர்ஸா பகுதியில் கட்டப்பட்டுவரும் ரோஸ்மோண்ட் ஹோட்டல் எனும் இரட்டை வான் கோபுர கட்டிடங்களில்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? எல்லாம் காசு! பணம்! துட்டு! மணி! மணி!!

Source: 7 Days & 

 அதிரை நியூஸ்:0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-