அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சுயமரியாதையை கற்றுத் தர வேண்டிய பள்ளிகளில் ஆசிரியரின் கால்களை மாணவர்கள் கழுவச் சொல்வதா?ஆர். எஸ். எஸ். அமைப்பின் முக்கியஸ்தரான எஸ்.குருமூர்த்தி, பாஜவைச் சேர்ந்த ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள இந்து ஆன்மீக கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.
இதில் வியாழக்கிழமை ‘மாத்ரு – பித்ரு வந்தனம் – ஆச்சார்ய வந்தனம்’ என்று தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை வணங்குதல் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர். அமிர்தா, பத்மா சேஷாத்ரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 1008 பேர் இதில் பங்கேற்றனர்.பள்ளி மாணவர்களிடையே சுயமரியாதையைப் புதைத்து இந்துத்துவ கொள்கைகளை திணிப்பதாக பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Dhalapathi Raj
வெட்கக்கேடு!

இந்து ஆன்மிக சேவை என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நேற்று நடந்துள்ளது.சுயமரியாதையை கற்றுத்தரவேண்டிய பள்ளிகளில் மாணவர்களை விட்டு ஆசிரியர்களின் கால்களை கழுவச்செய்வது சரியா?

கருப்பு கருணா1008 ஆசிரியர்களுக்கு மாணவர்கள்பாதபூஜை – செய்தி

எங்க காலத்துல இல்லாத புதுவகை செய்முறை தேர்வு போலயிருக்கே…இது எந்த பாடத்துல வருது கல்வி அதிகாரிகளே..?

கையில் ஆளுக்கொரு மணியை குடுத்து ஆட்டச்சொல்லாததுதான் பாக்கி…
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்துக்கு எதிராக டெல்லி மேல்–சபையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி குரல் எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:–

ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில் இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றனர்.

அதில் 1,800–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பினை பள்ளிக்குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு பகுதியே.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

கனிமொழி எம்.பி.யின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி., டி.ராஜா, மத்திய மந்திரி ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-