அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மதுரை விமானநிலையத்திற்கு, துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சி லால்குடியை சேர்ந்த முருகேசன் (32), குறைந்த விலையில் வாங்கிய டிவி கொண்டு வந்திருந்தார் சுங்கத்துறை அதிகாரி ரூ.7 ஆயிரம் கட்டிய பிறகே டிவியை எடுத்துச்செல்ல வேண்டும் என கூறினர். மிக குறைந்த விலை டிவி அவ்வளவு பணம் தர இயலாது என முருகேசன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தான் வெளிநாட்டில் குறைந்த விலைக்கு வாங்கிய டிவிக்கு மிக அதிகமாக பணம் கட்ட சொன்னதால் மிகவும் விரக்தியடைந்த முருகேசன், டிவியை கீழே போட்டு உடைத்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப் போவதாக தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி அவரை அதிகாரிகள் விடுவித்தனர்.

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. தொடர்ந்து இது போன்று அதிக வரி விதிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையத்தில் கடும் பாதிப்புக்குள்ளாவதாக பயணிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முருகேஷனின் உடைந்த டிவிக்கு பதிலாக வேறு டிவி வழங்க முகநூல் நண்பர் ஒருவர் முன் வந்துள்ளார். இதனை அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நேற்று ஒரு சகோதரன் வெளிநாட்டில் இருந்து வாங்கிவந்த டிவிக்கு விமானநிலைய அதிகாரி அதிக வரி கேட்டதால் கொடுக்க இயலாத அந்த சகோதரன் , அந்த டிவியை விமான நிலையத்தில் உடைத்துவிட்டு சென்ற செய்தியை படித்ததில் இருந்து பெரும் சோகம் சூழ்ந்து கொண்டது .வெளிநாட்டில் வாழும் ஒரு சாதாரணன் அந்த டிவியை வாங்க எத்தனை நாள் காத்திருப்பான் எப்படியெல்லாம் அதற்க்கு பணம் சேர்ப்பான் என்பது இங்கு உள்ளவருக்கு மட்டுமே தெரியும் .ஆசையாய் வாங்கிய அந்த டிவியை அவனே உடைத்தெறியும் போது அவன் மனம் எத்தனை துன்பங்களை சந்தித்திருக்கும் நினைக்கும் போதே மனம் பதறுகிறது .

இந்த செய்தி அறிந்த என் இனிய நண்பர் Bhaskaran Sukumaran அவர்களின் நண்பர்கள் அந்த சகோதரனுக்கு சாம்சங் (SAMSUNG) டிவியை அன்பளிப்பாக தர முன் வந்துள்ளனர். அந்த சகோதரனின் முகவரி அல்லது அவரை பற்றிய தகவலை எனக்கு உடனே தெரியப்படுத்துங்கள் . எனது வாட்ஸ் ஆப் எண் 00973-33768876.

-வல்லம் பசீர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-