அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர், நேற்று முன்தினம் பெரம்பலூர் சென்று விட்டு பொன்னகரம் கிராமம் நோக்கி திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ராஜபாளையத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக துரைசாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த துரைசாமியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-