அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
முள்ளங்கியில் வென்முள்ளங்கி மற்றும் சிவப்பு முள்ளங்கி. என இரு வகைகள் உள்ளன. இந்த இரண்டு முள்ளங்கிகளும் ஒத்த மருத்துவ குணங்களே உள்ளன.

நம் முன்னோர்கள் ஒரு பொருளுக்கு பெயர் வைக்கும் பொழது அதன் பயன்கள் மற்றும் அதன் பண்புகளை வைத்தே பெயர் இடுகின்றனர் அந்த வகையில் முள்ளங்கியை பார்க்கும்போது இதற்கும் ஒரு சரியான காரணப்பெயரை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். முள்ளங்கி என்ற வார்த்தையை இரண்டாக பிரிக்கும் போது முள் மற்று அங்கி என்று இருவார்தைகள் வருகிறது அதாவது இந்த முள்ளங்கி நம் உடலுக்கு ஒரு கவச சட்டைபோல் காக்கிறதாம். முள்ளங்கியில் மிக அதிகமான கந்தக சத்து இருக்கிறது..

50 ml முள்ளங்கி சாறில் ஒரு டம்ளர் மோர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தினம் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர மூல நோயை குணமாக்குமாம் மூலத்தினால் ஏற்படும் வலியும் கடுப்பும் குறைக்கும். வயிற்று எரிச்சலை போக்கக்கூடியது. வயிற்று புண்னை ஆற்றக்கூடியது. பசியை தூண்டக்கூடியது மேலும் சிறுநீரகத்தை சரியாக வேலை செய்ய வைக்கிறது.
முள்ளங்கி சாறை பயன்படுத்தி இரும்பல் டானிக் செய்முறை
5 லிருந்து 10 எம் ல் முள்ளங்கி சாறு ,
ஒரு ஸ்பூன் தேன்
ஒரு சிட்டிகை உப்பு

மேற்கண்ட பொருள்களை ஒன்றாக சேர்க்க இரும்பலுக்கான டானிக் தயார். தொடர்ந்து இரும்பல் வரும் காலங்களில் இதை பருகினால் இரும்பல் கட்டுப்பாட்டுக்கு வருமாம். பொதுவாக இரும்பல் வரும்போது பெரும்பாலோர் மருத்துவ கடைக்கு சென்று இரும்பல் டானிக்கை வாங்கி பருகுவர் இந்த இரும்பல் டானிக்கை பருகுவதால் மயக்கநிலை அல்லது ஒருவித படபடப்பு ஆகிய பக்கவிளைவுள் ஏற்படுகிறது. எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் வீட்டிலேயே நாம் இரும்பல் டானிக்கை தயார் செய்து பயன் அடையலாம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-