அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பச்சை காய்கறிகள், இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவ பயன் தருகிறது.
உங்களது, இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது ஆட்டு இறைச்சி. வெறும் சதை இறைச்சியை மட்டும் உண்பதை தவிர்த்து உறுப்பு இறைச்சியை சாப்பிட பழகுங்கள் இது உங்கள் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும்.
ஆட்டின் நாக்கு.
உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும். உடலின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வளிக்கிறது ஆட்டிறைச்சி, பின் நூறு வருஷம் எளிது தானே!!! (பி.கு: தண்ணியடிச்சுட்டு சைடுடிஷ்க்கு இத சேத்தி சாப்பிடுவது எல்லாம் உடல் நலத்துக்கு ஒத்துவராது!! )
ஆட்டின் சிறுநீரகம்.
இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.
ஆட்டின் கொழுப்பு.
ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
ஆட்டின் நுரையீரல்.
உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.
ஆட்டின் இதயம்.
இதயத்திற்குப் நல்ல பலம் தரும் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்.
ஆட்டின் மார்பு.
கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப்படுத்தும்.
ஆட்டின் மூளை.
கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.
ஆட்டின்கண்.
பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.
ஆட்டுக்கால்கள்.
ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக்களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்
ஆட்டு தலை.
இதயம் சார்ந்த வலிகளும் கோளாறுகளும் நீங்கும். குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-