அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி: 


ஆன்லைன் வீடியோ விளம்பரங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க டிராய் முடிவு செய்துள்ளது. மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் எந்த இணையதளத்தை பார்த்தாலும் அதில் விளம்பரங்கள் இருக்கும். இவற்றால் பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஆனால் இவை வீடியோ வடிவில் இருந்தால், இணைய டேட்டாவை காலி செய்து விடுகின்றன. அதாவது, வாடிக்கையாளர் இணைய தள பக்கத்தை திறந்தவுடன், அதிலுள்ள வீடியோ விளம்பரம் தானாகவே ஓட ஆரம்பித்து விடுகி–்றது. மொபைல் உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர், இணைய தளத்தை சிக்கனமாகத்தான் பயன்படுத்துகி–்ன்றனர். ஆன்லைன் வீடியோ விளம்பரங்கள் இந்த நோக்கத்தையே பாழடித்து விடுகின்றன. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு, வீடியோ விளம்பரங்கள் மறைமுகமாக இணைய உபயோகத்தை அதிகரிக்க செய்கிறது. இணைதளம் பார்ப்போரில் 42 சதவீதம் பேருக்கு இது பற்றி தெரிவதே இல்லை. இந்த விளம்பரங்களால் பயன்பாடு குறைவாக இருந்தும் பில் அதிகமாவதை 35 சதவீதம் பேர் உணர்ந்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளது. வீடியோ வடிவ விளம்பரங்கள் மொபைல் சேவை நிறுவனங்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான்.

இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: இணைய தளம் பார்க்கும்போது, நுகர்வோரின் விரும்பம் அல்லது கவனம் இல்லாமலேயே அவர்களது இணைய பேக்கேஜில் வீடியோ ஓட தொடங்குகிறது. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னை. இதை தடுப்பது எப்படி என டிராய் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டம் உள்ளது. விரைவில் இதற்கு ஒரு தீர்வு அமலுக்கு வரும். இது தவிர, தொழில்நுட்ப ரீதியாக இதற்கு தீர்வு இருக்கிறதா என்பதை ஆராயுமாறும் கேட்டுக்கொண்டிருக்கோம். அவ்வாறு இருந்தால், அதற்கான நிறுவனங்களுடன் இணைந்து முடிவு காணப்படும் என்றார்.- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=241523#sthash.aaAjwDs2.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-