அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஆகஸ்ட் 16
துபாயில் இனி புதிய விசா, ரெஸிடென்ஸி விசா புதுப்பித்தால், விசா ரத்து செய்தல் மற்றும் இது தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் இனி General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) அலுவலகம் செல்லாமலேயே அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு மையங்களிலேயே (Typing Centers) விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

"UAE Vision" என்ற தூரநோக்குத் திட்டத்தின் கீழ் இத்தகைய இலகு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சரியான மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் வசிப்பிட முகவரிகளை எத்தகைய தவறும் இன்றி அளிக்க வேண்டும்.

விசிட் விசா விண்ணப்பதாரர்களுக்கு ஈமெயில் மூலம் ஈ-விசாவாக (e-visa) அனுப்பப்படும், இனி விசிட்டிற்கு பேப்பர் வடிவ விசா கிடையாது. ரெஸிடென்ட் விசாக்கள் மட்டும் 'Zajel' கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்.

விசா நடைமுறைகள் அனைத்தையும் ஓரிடத்திலேயே முடித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டாலும் ஸ்டாம்பிங் செய்யப்பட்ட பாஸ்போர்ட்களை பெற மட்டும் GDRFA அலுவலகத்திற்கு ஒருமுறை நேரில் செல்ல வேண்டும்.

அதுபோல் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் விசா விண்ணப்பம் அனைத்தும் இமிக்கிரேசன் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது குறித்து (Final Step) விண்ணப்பதாரருக்கு "SMS" மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

கடந்த ஒரு மாதமாக பரீட்ச்சார்த்த முறையில் இருந்த இந்த திட்டம் தற்போது துபாயில் மட்டும் அமுலுக்கு வந்துள்ளது ஏனைய அமீரக பகுதிகள் குறித்து தகவல் இல்லை.

Source: Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-