அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விரைவில் முழுவீச்சில் அனைத்துப் பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக இயக்குநர் பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார். வியாழன் அன்று திருவனந்த புரத்தில் இருந்து 300 பேருடன் பயணித்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வி‌மானம் துபாயில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது. இதில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியின் போது வீரர் ஒருவர் உயிரிழந்தார்.முறையாகத் தரையிறங்க முடியாமல் போனதன் காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விமான விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை சீர் செய்யும் பணி துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாளில் இயல்பான போக்குவரத்து தொடங்கும் என்றும் விமான நிலைய தலைமை நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். விமான விபத்தால் 242 சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், 64 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 19ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-