அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

  


பெரம்பலூர் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு பஸ்கள் மாற்றப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பஸ்சுக்குள் மழை

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அப்படி இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களின் மேற்கூரைகள், உடைந்து கிடக்கின்றன. ஒரு சில பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமலும், இருக்கைகள் உடைந்தும், படிக்கட்டுகள் பலம் இழந்தும் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பெரும்பாலான பஸ்களில் விளக்குகள் எரிவதில்லை.

இதற்கு உதாரணமாக நேற்று முன்தினம் பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூருக்கு ஒரு டவுன்பஸ்(10பி) புறப்பட்டு சென்றது. அப்போது பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. இந்த டவுன் பஸ்சின் மேற்கூரை பழுதடைந்து இருந்ததால் மழைநீர் பஸ்சிற்குள் நின்ற பயணிகளின் மேல் விழுந்தது. இதன் காரணமாக பஸ்சிற்கு உள்ளேயே பயணிகள் குடிபிடித்துபடி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடை இல்லாதவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

 V.களத்தூர் 2A டவுன் பஸ்


பெரம்பலூர்- வி.களத்தூர் செல்லும் டவுன் பஸ் நிலையும் இது தான்.

எதிர்பார்ப்பு


மேலும், பெரம்பலூரில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான டவுன் பஸ்களிலும் இதேநிலைதான் காணப்பட்டன. இனிவரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்ற வேண்டும் அல்லது அவைகளை சீரமைக்க வேண்டும் என்று பஸ் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-