அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஐக்கிய நாடுகள்: ஐநாவில் நடந்த இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி கவுரவிக்கப்பட்டார். இந்தியாவில் 70வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐநா சபையில் உள்ள இந்திய தூதரகத்திலும் இவ்விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் கர்நாடக இசைக்கலைஞரான மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்த நாளும் இதில் கொண்டாடப்பட்டது.

இதற்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பின்னர் ஐநாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் 2வது இந்தியர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். ஐநாவில் இதற்கு முன்பு எம்.எஸ்.சுப்புலட்சுமி 1966ம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். சுமார் 3 மணி நேரம் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி இயற்றிய மற்றும் அவர் பாடிய பாடல்களும் இதில் இடம்பெற்றன. ரஹ்மானின் இரண்டு சகோதரிகளும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் உட்பட பல்வேறு விருதுகளை வென்ற ஸ்லம்டாக் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலை அவர் பாடினார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் பலர் எழுந்து நின்று பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-