
துபாய், ஆகஸ்ட் 07
அமீரகத்தில் பணிபுரிகின்ற யாரும் தங்களுடைய பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் எந்த நிறுவனமும் அதை ஏற்றே ஆக வேண்டும் மறுக்கக்கூடாது என அமீரக மனிதவள அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
அதேவேளை ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு காலத்தை (Notice Period) பரஸ்பரம் நீட்டித்துக் கொள்ள சம்மதித்தால் அதை அதிகாரபூர்வமாக நிறுவனத்திடமிருந்து ஊழியர்கள் எழுதி வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றாலும் தொடர்ந்து 6 மாதங்கள் ராஜினாமா செய்த பின்பும் பணியாற்றினால் ஊழியர்கள் விண்ணப்பித்த ராஜினாமா கடிதம் தானாகவே காலாவதி ஆகிவிடும் என்றும் ஊழியர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை தொலைநகல் (Fax) வழியாகவோ, அஞ்சல் (Mail) வழியாகவோ, மின்னஞ்சல் (e-mail) வழியாகவோ அனுப்பிய விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source: Emirates247
தமிழில்: அதிரை நியூஸ்:
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.