அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரியகுளம் கீழ வடகரை காயிதேமில்லத் தெருவில் வசிக்கும்
ஜமால் மைதீன் இவரது மகன் யூனுஸ் சவூதி தம்மாமில் வேலைக்கு சென்றுள்ளார் சென்ற இடத்தில் தங்க இடமும் இல்லாமல் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு மேல் மிகவும் சிரமத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

விபரம் அறிந்த யூனுஸ் தகப்பனார் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில நிர்வாகிகளிடம் தனது மகனை மீட்டு தரக்கோரி மனு அளித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் தம்மாமில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடியாக யூனுஸ் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படி கோரினார்கள்.

இதன் அடிப்படையில் தம்மாம் I.S.F நிர்வாகிகள் ஜின்னா, மக்தூம், சபியுல்லா மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கும் இடவசதி மற்றும் சட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வாலிபரை மீட்டு பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

மும்பை சென்னை வழியாக 15/08/2016 காலை 11.30மணியளவில் மதுரை விமானநிலையம் வந்தடைந்த வாலிபரை விமான நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுப் தெற்கு நிர்வாகிகள் சாகுல் ஹமீது, சம்சுஅப்துல்லா 50வதுவார்டு நிர்வாகிகள் நாகூர் கனி, சம்சுதீன் யூனுஸின் தந்தை ஜமால்மைதீன் ஆகியோர் வரவேற்றனர்.

மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு வாலிபர் யூனுஸும் அவரது தந்தை ஜமால் மைதீன் அவர்களும் நன்றி கூறியதுடன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுநல சேவையை மனம் நெகிழ்ந்து பாராட்டினர்.

துரிதமாக செயல்பட்டு வாலிபரை மீட்டெடுத்து தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தமிழ் பிரிவின் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,ஊடக பொறுப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் பாராட்டினர்.

யூனுஸ் அவர்களின் தந்தை ஜமால் மைதீன் அவர்கள் இந்தியா தவ்ஹித் ஜமாஅத் பெரியகுளம் தொகுதி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: கீழை அரூஸி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-