அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல்.


தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.


விருதுகள்...ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
செவாலியே...தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.செவாலியே சிவாஜி...முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.


வாழ்த்து...
செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.பன்முகத் திறமையாளர்...கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   தமிழில் "செவாலியே" பெறும் 2வது நடிகர் கமல்... இந்திய அளவில் 5வது!
சென்னை: தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த உயரிய விருது மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த விருதுக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.
இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார்.

இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார். 
இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:
1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே
1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்
2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்
2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-