அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சிங்கப்பூர்,ஆகஸ்ட் 26


கூகுள், வால்வோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆளில்லா வாகனங்களை இயக்க பல்வேறு சோதனைகளை செய்து வரும் நிலையில் "nuTonomy" என்ற அமெரிக்க - சிங்கப்பூர் கூட்டு வர்த்தக கம்பெனி ஒன்று சத்தமில்லாமல் அத்தகைய டிரைவர் இல்லா டேக்ஸிகளை இன்று 25.08.2016 வியாழன் முதல் சிங்கப்பூரில் களமிறக்கியுள்ளது.


கடந்த திங்கட்கிழமை முதல் ஸ்மார்ட்போன் முன்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சில பயணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக சில மைல்களுக்கான இலவச சவாரியை வர்த்தக சவாரியின் முன்னோட்டமாக பரிசளித்து வருகிறது.


ஆரம்பமாக, சுமார் 6.5 கி.மீ சுற்றளவுக்குள் “one-north” என்ற வர்த்தகம் மற்றும் குடியிருப்பு சார்ந்த பகுதிகளில் மட்டும் சேவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றாலும் சிங்கப்பூர் முழுமைக்கும் 2018 ஆம் ஆண்டிற்குள் ஆளில்லா டேக்ஸிகளை மட்டுமே இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இதன்வழி தற்போது சிங்கப்பூரின் சாலைகளில் தவழும் சுமார் 9 லட்சம் வாகனங்கள் சுமார் 3 லட்சமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


உபேர் டாக்ஸி நிறுவனம் எதிர்வரும் வாரங்களில் பிட்ஸ்பர்க் நகரில் இதுபோன்ற சேவையை துவங்கயிருந்த நிலையில் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்ட 'ரெனால்ட் ஜோ' மற்றும் 'மிட்சுபிஷி' மின்சக்தி வாகனங்களை கொண்டு சிங்கப்பூர் அரசின் அனுமதியுடன் களம் கண்டுள்ளது.


தற்போது மிகச்சிறிய அளவில் 6 வாகனங்கள் மட்டுமே சேவையில் உள்ளன என்றாலும் இந்த வருட இறுதிக்குள் அவை 1 டஜன் வாகனங்களாகவும், சேவையின் சுற்றளவும் படிப்படியாக சிங்கப்பூர் முழுமைக்கும் அதிகரிக்கபடவுள்ளன. மேலும், சில ஆசிய நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-