அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய், ஆகஸ்ட் 08
துபாயில் நிலவும் டேக்ஸி வாடகைகள் குறித்த சந்தேகங்களுக்கு சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (RTA) விளக்கமளித்துள்ளது. அதன்படி, பகல் நேரம், இரவு நேரம், பரபரப்பான நேரம், சாலை ஒரங்களில் பிடிக்கப்படும் டேக்ஸி, ஷாப்பிங் மால்கள் மற்றும் டேக்ஸி சேவை மையங்கள் மூலம் பிடிக்கப்படும் டேக்ஸி என பலதரப்பட்ட டேக்ஸிக்களின் மீட்டர் ஆரம்ப வாடகை (Flag Fall Tariffs) நிலவரங்கள் தெரிய வந்துள்ளன.

(சென்னையில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ பிடிப்பதற்கும் சாலையில் செல்லும் ஆட்டோவை கை காட்டி பிடிப்பதற்கும் உள்ள வாடகை வித்தியாசத்தை அனுபவித்தவர்கள் இந்த பதிவை நன்கு புரிந்து கொள்ள இயலும்)

1. பொதுவாக பகல் நேரங்களில் சாலையில் டேக்ஸி பிடித்தால் ஆரம்ப மீட்டர் கட்டணம் 5 திர்ஹம்.

2. இரவு 10 மணி முதல் காலை காலை 6 மணி வரை சாலையில் டேக்ஸி பிடித்தால் மீட்டர் ஆரம்பக் கட்டணம் 5.50 திர்ஹம்.

3. பரபரப்பான நேரங்களில் சேவை மையங்கள் (Despatch Centers) வழியாக பிடிக்கப்படும் டேக்ஸிக்களுக்கான மீட்டர் ஆரம்பக் கட்டண விபரம்:
a. காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை 8 திர்ஹம்.
b. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 12 திர்ஹம்.
c. இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 9 திர்ஹம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. மால்களில் டாக்ஸிக்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது அதன் நிமித்தமாக மால் அதிகாரிகள் தகவல் தெரிவித்தால் அதுவும் சேவை மைய அழைப்பாக கணக்கிடப்பட்டு ஆரம்பக் கட்டணமாக 9 திர்ஹத்திலிருந்து மீட்டர் ஓடத் துவங்கும். (என்ன! டேக்ஸியில் ஏறாமலே தலைசுத்துதா?)

RTAயின் மேல் விளக்கங்கள்:
1. மால்களில் பிடிக்கப்படும் டேக்ஸிகள் சேவை மையங்கள் மூலம் வருகிறதா அல்லது சாலைவோர டேக்ஸியா என்பதை டேக்ஸிக்கள் மேலுள்ள இன்டிகேட்டர்கள் (Roof Top Lights) மூலம் அறிந்து கொள்ளலாம்.

2. ஓவ்வொரு டேக்ஸியிலும் எந்தெந்த நேரத்தில் என்ன வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பதை அறிவிக்கும் குறிப்புகள் பயணிகளின் பார்வையில் படும்படி வைக்கப்பட்டிருக்கும்.

3. பயணி கேட்கும் பட்சத்தில் டேக்ஸி ஓட்டுனர் 'அந்த டேக்ஸி' சாலையோர கட்டணத்தில் வருகிறதா? அல்லது மால்களின் சேவை மைய கட்டணத்தில் வருகிறதா? என்பதை அறிவிப்பார்.

இனி மால்களுக்கு ஷாப்பிங் போனோமா, பஸ்ஸூ மெட்ரோவ புடிச்சி வூட்டுக்கு வந்தோமான்னு இருக்கனும், சரியா!

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-