அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




கேரள மாநிலம் மலப்புரம் மாவடத்தைச் சேர்ந்த மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரையை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 26). இவர் எடக்கரையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் நவ்சாத்தின் செல்போன் கடைக்கு சென்றார். தனது செல்போன் பழுதாகி விட்டது சரிசெய்து தாருங்கள் என்று கூறி கொடுத்து விட்டு சென்றார்.

செல்போனை நவ்சாத் சோதனை செய்து பார்த்தபோது மாணவி தனது உருவத்தை படு கவர்ச்சியாக பலவித கோணங்களில் செல்பி எடுத்து வைத்திருந்தார்.

அதனை தனது செல்போனுக்கு நவ்சாத் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்தார். செல்போனை வாங்க வந்த மாணவியிடம் நீ எடுத்துக்கொண்ட கவர்ச்சி படங்கள் எனது செல்போனில் பதிவு செய்து விட்டேன்.

எனது ஆசைக்கு இணங்கினால் அவைகளை அழித்து விடுகிறேன். இல்லை என்றால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். அதிர்ச்சியடைந்த மாணவி நவ்சாத்தின் மிரட்டுலுக்கு பணிந்தார்.

அதன்படி செல்போன் கடையிலேயே சிறுமியை நவ்சாத் பாலியல் பலாத்காரம் செய்தார். 3-வது நாளாக நவ்சாத் வற்புறுத்தியபோது இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் நவ்சாத்திடம் சென்று எனது மகளை திருமணம் செய்து கொள். இல்லையென்றால் போலீசில் புகார் செய்து விடுவோம் என்று எச்சரித்தனர். மிரட்டலுக்கு பயந்த நவ்சாத் திருமணத்துக்கு சம்மதித்தார். அதன்படி திருமண ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தனக்கு நவ்சாத்தை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தில் எனக்கு விரும்பம் இல்லை என்று சிறுமி பெற்றோரிடம் கூறினார். ஆனால் பெற்றோர் அதை கேட்காமல் திருமண வேலையில் ஈடுபட்டனர். சுதாரித்துக்கொண்ட சிறுமி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இது குறித்து மலப்புரம் குழந்தைகள் காப்பக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். சிறுமியை மீட்ட அதிகாரிகள் காப்பகத்தில் வைத்து சிறுமியை சோதனை செய்தனர்.

அப்போது சிறுமி பாலியல் பலாத்தகாரம் செய்யப்பட்டது உறுதியானது. குழந்தைகள் காப்பக அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் இது குறித்து மலப்புரம் போலீசில் புகார் செய்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதுங்கியிருந்த நவ்சாத்தை இன்று மதியம் கைது செய்தனர்.

சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர். பெற்றோரும் கைதாவர்கள் என்று தெரிகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-