அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உலக மக்கள் தொகையில் ஆறு சதவிதம் தன்னகத்தே கொண்டுஉள்ள இந்தியா, தவிர்க்க முடியாமல் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருப்பது ஏன்? இதற்கு பதில்வைத்திருப்பதாக சீன மீடியாக்கள் நினைக்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் செயல்பாட்டிற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை சீனாவின் அரசு மீடியா பட்டியலிட்டு உள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்மை, உடல்நல குறைவு, ஏழ்மை, விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படாமை, சிறுவர்கள் அனைவரும் டாக்டர் மற்றும் என்ஜினியர் ஆகவேண்டும் என்று வற்புறுத்தப்படுவது, மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட் போட்டிக்கு கிடைத்து உள்ள செல்வாக்கு, இந்தியாவில் ஆக்கி போட்டியின் மகிமை மங்கிவருவது, ஒலிம்பிக் போட்டி குறித்து கிராமபுறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவற்றை சீன மீடியா பட்டியலிட்டு உள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கியதில் இருந்து சீன அரசு நிர்வாகம் செய்யும் மீடியா போட்டி செய்திகளை வர்ணனை செய்து வருகிறது, உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் தொடர்ச்சியான தோல்விக்காக காரணத்தையும் வாசகர்களுக்கு விவரித்தது. வர்ணனையில் கேலிசெய்யும் விதமாகவே, மார் தட்டும் விதமாகவே எதுவும் இடம்பெறவில்லை, வெறும் காரணம் மட்டும் எடுத்துரைக்கப்பட்டது.
”இந்தியா 1,200,000,000 மக்களை கொண்டு உள்ளது, சீனாவிற்கு அடுத்தப்படியாக உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம்பிடித்து உள்ளது. ஆனால் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அரிதாகவே பதக்கங்களை வாங்கி உள்ளது. மக்கள் தொகையில் என்ன இருக்கிறது? கடந்த ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் எண்ணிக்கையில் இந்தியா இடம்பிடித்தது, இந்தியா மொத்தம் 6 பதக்கங்களை பெற்றது, இருப்பினும் தங்கம் கிடையாது என்று டோவ்டியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங், 2012 லண்டன்) இந்தியா பதக்கங்களை, அதன் மொத்த மக்கள் தொகையில் விகிதத்தில் கணக்கிட்டால் கடைசியில்தான் இருக்கும். வசதிவாய்ந்தோர் மற்றும் ஏழைகள் இடையே உள்ள இடைவெளியானது மிகப்பெரியது, ஏழைகள் விளையாட்டு துறையில் திறன்பெற்று இருந்தாலும் வாழ்வாதாரத்திற்கு கூட போராடும் அவர்கள், பயிற்சிக்கு குறைந்த அளவிலே செலவிட முடியும். விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பிற்கு இந்திய அரசு சிறிதளவு மட்டுமே முதலீடு செய்கிறது. இந்தியாவில் முக்கியமான விளையாட்டுகளும், போட்டிநிறைந்த விளையாட்டுகளும் மிகவும் பின்தங்கி உள்ளது.
இந்தியாவில் உள்ள விளையாட்டு கலாச்சாரத்தின் பற்றாக்குறையின் பங்களிப்பே ஒலிம்பிக் வெற்றியின் குறைபாடாகும் என்று சீனாநியூஸ் கூறிஉள்ளது.
இந்தியாவின் கலாச்சாரம் உள்ளூர் விளையாட்டு மேம்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது. அதிகமான குடும்பத்தினர் தங்களுடைய குழந்தைகள் மருத்துவர் அல்லது கணக்காளர் ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுடைய விளையாட்டு திறனானது அவர்களுடைய குடும்பம் மட்டுமின்றி அண்டைய வீட்டாளர்களாலும் அமிழ்த்தப்படுகிறது. அவர்கள் அதிஉயர் போட்டியில் பங்கு கொள்வது தடுக்கப்படுகிறது.
மக்களிடையே ஜாதிவாரியாக பிரிவுகள் காணப்படுகிறது, இவர்களில் அடிமட்ட பிரிவை சேர்ந்தவர்கள் கல்வியை பெறுவதற்கு கூட போராடுகின்றனர், அவர்கள் போதுமான ஊட்டச்சத்து இன்மையினாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிராமபுறங்களில் விழிப்புணர்வின்மை
ஒலிம்பிக் போட்டியில் வெற்றிக்கனியை பறிப்பதற்கு கிராமபுறங்களே முக்கியமானது என்று கூறிஉள்ள சீனாபொலிட்டிக் இணையதளம், “கர்நாடகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆய்வாளர்கள் விசாரணை செய்து உள்ளனர். சிறந்தபணி குறித்து அவர்கள் கிராம மக்களிடம் கேள்விகளை கேட்டு உள்ளனர். ராஜஸ்தானில் 300 கிராமத்தினர் மென்பொருள் பொறியாளர், கட்டிடக்கலை பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர் என்று கூறியதை காட்டுகிறது. சில கிராம மக்கள் ஆசிரியர் பணி அல்லது ராணுவத்தில் பணிபுரிவதை கூறிஉள்ளனர். சிறப்பான பொருளாதாரம் கொண்ட கர்நாடக மாநிலத்திலும் எந்தஒரு வேறுபாடும் தெரியவில்லை. யாரும் விளையாட்டு என்பதை தெரிவிக்கவே இல்லை. ஒலிம்பிக் என்பதையே மறந்துவிட்டனர் என்று கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளது.
கிரிக்கெட்
”கிரிக்கெட் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆகிவிட்டது. மதத்தினை போன்று கிரிக்கெட் போட்டியை விரும்புகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை பற்றி தெரியாதவர்கள் புற சமயத்தை சார்புடையவராக பார்க்கப்படுவார். இதன் காரணமாகே, அதிக இளைஞர்கள் பிற விளையாட்டு போட்டிகள் தொடர்பான பயிற்சியை பெறுவதற்கு தயங்குகின்றனர். இந்தியர்கள் கிரிக்கெட் போட்டியை விரும்புகின்றனர், திறன் வாய்ந்தவர்களாகவும் உள்ளனர். துரதிஷ்டவசமாக ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டி கிடையாது. இதனால் இந்தியர்கள் தங்கப்பதக்கம் வெல்ல முடியாது என்று டோவ்டியோ இணையதளம் சுருக்கமான கருத்தை வெளியிட்டு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-