அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



டெல்லியில் மரித்தது மாதிபுல் இல்லை... மனிதநேயம்தான்மரித்துப்போன மனிதம்: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரிடம் கொள்ளை!





இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார்.


அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம்.


இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித் தள்ளிய பிறகு வேன் ஓட்டுநர் வெளியே வந்து பாதிப்புக்குள்ளான நபரை பார்க்கிறார். பின்னர் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்.


பின்னர், அந்த வழியாக வந்த ஒருவர் இறுதியாக, அடிப்பட்டவரை அணுகுகிறார்.


அந்த நபரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, அவரிடமிருந்த கைப்பேசியை திருடிச் செல்கிறார்.


இரவுப்பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது சாலையில் விபத்துக்குள்ளான அந்த நபருக்கு உதவ யாருமின்றி, உயிரை விட நேர்ந்திருக்கிறது.


யாருமே உதவத் தயாராக இல்லாத, மனிதநேயமற்ற மனநிலை, இந்தியாவில் பெரும் விவாவதத்தைக் கிளப்பி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-