அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை: தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 'பிப்பீள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் செயலாளர் அருண் பிரசன்னா, கடந்த 2015-ல் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன் விசாரணைக்கு இன்று (ஆகஸ்ட் 18) வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து வழக்குத் தாக்கல் செய்த அருண் பிரசன்னா கூறுகையில், "ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன.
அதைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் தகவல் உரிமை அறியும் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் ஒட்டகம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம். அதைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கில் தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்துத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-