அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகத்தில் முதன் முறையாக பசியால் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் சாலையோரத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய ஃபிரிட்ஜ் வைக்கும் திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையை மையமாக கொண்டு இயங்கி வரும் 'நோ ஃபுட் வேஸ்ட்' தொண்டு நிறுவனமும் கோலிவுட் கபே உணவகமும் சேர்ந்து இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முறையாக ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, ஆர்.எஸ் புரத்தில் பசியில் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள் அடங்கிய 'சைடு வாக் ஃபிரிட்ஜ்' அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் மிஞ்சும் உணவுப் பொருட்களை இந்த ஃபிரிட்ஜில் வைத்து விடும்படி அந்த பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவுத் தேவைப்படுபவர்கள் இந்த ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து பசியாறிக் கொள்ளலாம்.

இந்த திட்டம் குறித்து 'நோ புட் வேஸ்ட்' தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பத்மநாபன் கோபாலன் கூறுகையில், ''கொச்சியில் பெண்கள் அமைப்பு ஒன்று இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். டெல்லியிலும் 'ஷேர் அண்டு கேர்' தொண்டு நிறுவனம், இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கோவையில் இந்த திட்டம் சாத்தியமாகுமா என் கள ஆய்வில் ஈடுபட்டோம். சில, உணவு விடுதி அதிபர்களிடமும் பேசினோம். ஆதரவு கிடைத்ததையடுத்து, கோவையில் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது..

கோலிவுட் கபே உரிமையாளர் ஹரிஹரன் சுரேஷ், ''இந்த திட்டத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய ஃபிரிட்ஜை முறையாக பராமரிப்பதுதான் சவாலாக இருந்தது. இந்தத் திட்டம் கொச்சியில் செயல்படும் விதத்தை நேரில் சென்று பார்த்தோம். வெற்றிகரமாக அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது ஆச்சர்யமளித்தது. இதையடுத்து, கோவையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார்.

கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வரும் ஹரிஹரன் சுரேஷ், தனது உணவங்களில் மிஞ்சும் உணவுப் பொருட்களை இங்கு கொண்டு வந்து பேக்கிங் செய்து வைக்கத் திட்டமிட்டுள்ளார். அவரது கோலிவுட் ரெஸ்டாரன்ட் அருகேயே உணவுப் பொருட்கள் அடங்கிய ஃபிரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த 'ஷேர் அண்டு கேர்' தொண்டு நிறுவனம் இந்த ஃபிரிட்ஜை இலவசமாக வழங்கியுள்ளது. அடுத்தகட்டமாக கோவை நகரம் முழுக்க இந்த திட்டத்தை விரிவுப்படுத்தவும் ஆலோசித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-