அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் நகரில் விதிகளை மீறும் ஆட்டோக்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட 3 ப்ளஸ் 1 என்றழைக்கப்படும் ஆட்டோக்களும், 43 ஷேர் ஆட்டோக்களும், 100-க்கும் மேற்பட்ட மற்றொரு வகை ஆட்டோவும் இயக்கப்படுகிறது. இதில், 90% ஆட்டோக்கள் நகரில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

நகரில் இயக்கப்படும் பல ஆட்டோக்களுக்கு முறையான உரிமம் இல்லை; பல ஓட்டுநர்களுக்கு முறையான ஓட்டுநர் உரிமமும் இல்லை. மேலும், அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

பல ஆட்டோ உரிமையாளர்களிடம் வாடகையைக் கொடுத்துவிட்டு, 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்துகள் அதிகமாவதோடு, அதற்கான நஷ்ட ஈடு பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்று சில ஆட்டோ ஓட்டுநர்களின் விதிமீறிய செயல்களால், அனைத்து ஓட்டுநர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், நகரில் போதுமான போலீஸார் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தேவையான போலீஸார் ஈடுபடுத்தப்படுவதில்லை. கண்காணிக்க போலீஸார் இல்லாததால், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை விதிகளைப் பின்பற்றாமல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டுநர்களும் அலுவலக நேரங்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதவிர, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-