அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


*திருச்சியில் 06-08-2016 அன்று AIMS WELFARE SOCIETY மற்றும் JAMAL MOHAMED COLLEGE இணைந்து நடத்திய TNPSC/UPSC விழிப்புணர்வு மற்றும் இலவச பயிற்சி முகாம் திறப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

*இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் Dr.Khaja Nazeemudeen அவர்கள்,முதல்வர் முஹம்மத் ஸாலிஹ், மமக தலைவர் prof.Jawahirullah, முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.A.M.அபுபக்கர், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, திரு.கற்பூரசுந்தரபாண்டியன் IAS retd,அய்மான் கல்லூரியின் செயலாளர் ஹபிபுல்லாஹ், ரேடியன் ராஜபூபதி, Prof.Syed , AIMS நிறுவனர் Mohamed Faizur Rahman, கோர் கமிட்டி உறுப்பினர்கள் ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜமால் கலந்துகொண்டனர். ஏறத்தாழ ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

*இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் Aims Welfare TN Trichy wing செய்திருந்தனர்.

*AIMS தமிழகத்தில் ஏழு இலவச அரசுத்தேர்வு பயிற்சி மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-