அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஒலிம்பிக் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்பதற்காக 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்களை கத்தார் நாடு அனுப்பியுள்ளது.


எண்ணெய் வளமிக்க கத்தாரில் பெரும்பாலான வெளிநாட்டினரே வசித்துவருகின்றனர். மேலும், வர்த்தக நடவடிக்கைகளையே அதிகம் நம்பியிருக்கும் அந்த g விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.


ஆனால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுத் திருவிழாவில், தங்கள் நாட்டை முன்னிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், மற்ற நாடுகளின் வீரர்களின்பால் கத்தாரின் கவனம் திரும்பியுள்ளது.


இதற்காக மற்றநாடுகளில் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்துள்ள வீரர்களை தங்கள் நாட்டின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும்படியான ஏற்பாடுகளை கத்தார் செய்துள்ளது.


அதன்படி, உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 17 நாடுகளின் வீரர்களை அந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது. சூடானில் இருந்து தடகள வீரர்கள், ஜேர்மனியில் இருந்து குத்துச் சண்டை வீரர்கள், பிரேசிலில் இருந்து பீச் வாலிபால் வீரர்கள் மற்றும் சீனாவில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் உள்ளிட்டோர் நடப்பு ரியோ ஒலிம்பிக் போட்டியில் கத்தார் சார்பில் பங்கேற்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-