அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்கு அறிமுகமான சகோதரி மாஷா நசீம் இந்த வருடத்திற்கான ''மாநில இளைஞர் விருதுக்கு'' தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

பள்ளிக்கூட நாட்களிலிருந்தே அறிவியல் துறையில் தாகம் கொண்ட மாஷா நசீம் இந்தியாவின் இளம் விஞ்ஞானி என்ற பெருமையுடன் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த கருவிகள் கண்டுபிடித்ததோடு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து சிறப்பித்துள்ளார்...

தற்போது M. Tech பட்டதாரியான மாஷா நசீம் நாகர்கோயிலில் அமைத்துள்ள Masha Innovation centre மூலம் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் படைப்பாற்றல் வளர்க்கும் சமூக பணியை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கவுள்ளது...
வருகிற 15 ம் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் இந்த விருதுடன், சான்றிதழ், தங்க பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறார்..
இவரது தந்தை சகோ. Kaja Nazeem குமரி மாவட்டத்தில் கருவூலத்துறையில் பணிபுரியும் அதிகாரி.. தனது மகளின் அறிவியல் ஆர்வத்தை உரமிட்டு வளர்த்ததோடு பணிச்சுமைக்கிடையிலும் குமரி முதல் காஷ்மீர் வரை மகளை அழைத்து சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தூண்டியவர்...

தற்போது மகளின் விருது அறிவிப்புகளை

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் பெற்றோராக மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டனர்...
சகோதரி மாஷா நசீமை வாழ்த்துவோம்.

வல்ல இறைவனை வேண்டுவோம்...
●/ J O I N Us ⇨ Kilakarai Classified

/▌

/ \

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-