அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஆக.2:
ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுவதையொட்டி விசுவக்குடி அணையில் பொது மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் வேல் முருகன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விசுவகுடி அருகே கல்லாற்று ஓடையின் குறுக்கே பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப் பின் சார் பாக செம் மலை, பச் ச மலை ஆகிய இரு மலைக் குன் று களை இணைத்து புதிய அணைக் கட்டு கட் டப் பட் டுள் ளது. இந்த அணை மூ லம் கல் லாறு எனும் காட் டாற் றில் செல் லும் வெள்ள நீர் வீணா கா மல் தடுத்து விவ சா யம் மற் றும் குடி நீர் தேவை க ளுக் குப் பயன் ப டுத் தும் வகை யில் இந்த அணைக் கட்டு, அமைக் கும் பணி நபார் டு வங்கி மூல மாக தொடங் கப் பட் டது.
அணை யின் கட் டு மா னப் பணி க ளுக் காக முத லில் ரூ.19 கோடி யும், அடுத்த கட் ட மாக திருத் திய மதிப் பீ டாக ரூ14.07 கோடி யும் என மொத் தம் ரூ.33.07 கோடி க ளுக்கு ஒப் பு தல் பெறப் பட்டு, 2 ரேடி யல் ஷட் டர் க ளு டன் கட் டு மா னப் பணி கள் முடிக் கப் பட்டு, ரூ.3.30 கோடி யில் அணை யின் உட் பு றம் ஆழப் ப டுத் தப் பட்டு மொத் தத் தில் ரூ36.37 கோடி யில் கட்டி முடிக் கப் பட் டது. அணை யி லி ருந்து பாசன வச திக் காக 4,175 மீட் டர் நீளத் திற்கு பாசன வாய்க் கால் கள் வெட் டப் பட் டுள் ளது. விசு வக் குடி அணைக் கட்டு மூலம் 40.67 மில் லி யன் கன அ டி நீரை சேமிக்க முடி யும்.
33 அடி உய ரத் திற்கு தண் ணீர் தேங்கி நிற் கும் திற னுள்ள அணை யில் கடந்த நவம் பர் இறு தி யில் பெய்த கன மழை கார ண மாக 25 அடி உய ரத் திற்கு, அதா வது 7.5 மீட் டர் உய ரத் திற்கு 23 மில் லி யன் கன அடி தண் ணீர் நிரம் பி யி ருந் தது குறிப் பி டத் தக் கது. கடந்த பிப் ர வரி மாதம் 27ம்தேதி திறந்து வைக் கப் பட்ட அணை யில் 25அடி உய ரத் திற்கு தேங் கி யி ருந்த தண் ணீர் பாச னத் திற்கு பயன் ப டுத் தா ம லேயே 15 அடி தண் ணீர் குறைந்து தற் போது 10அடி தண் ணீர் உள் ளது. இத னால் அணைக் கட்டு உள் ளி ருந்த மரங் கள் வெளியே தெரி யத் தொடங் கி யுள் ளது.
திறந்து 5 மாதங் களே ஆகி யுள்ள அணைக் கட் டில் இது வரை கல் லூரி மாண வர், டிரை வர் உள் பட 3 பேர் மூழ்கி லியா ன தால் அணைக் கட்டு உள்ளே இறங் கிக் குளிப் ப தற்கு தடை விதிக் கப் பட் டுள் ளது.
இது கு றித்த பெயர்ப் ப லகை அணைக் கட்டு முன்பு வைக் கப் பட் டும் அதனை அரு கி லுள்ள கிரா மத்து இளை ஞர் கள் யாரும் கண்டு கொள் வ தே யில்லை. சில நேரங் க ளில் தண் ணீர் திறந்து விடப் ப டும் ரேடி யல் ஷட் டர் க ளைக் கூட சுற் றிச் சுற்றி திறந்து விடக் கூ டிய அத் து மீ றும் செயல் க ளில் இளை ஞர் கள் ஈடு பட்டு வரு கின் ற னர்.
இருந் தும் வார விடு மு றை க ளில், பண் டிகை விடு முறை நாட் க ளில் அணைக் கட்டு பகு திக்கு கூட் டம் கூட் ட மாக, குடும் பத் தா ரு டன் ஆர் வ மு டன் சென்று, ரசித்து விட் டும், குளித்து விட் டும் வரு வோ ரின் செயல் கள் தொடர்ந்த படி தான் உள் ளது. இந் நி லை யில் இன்று ஆடிப் பெ ருக்கு என் ப தால் நீர் நி லை களை நாடிச் சென்று வழி ப டும், பொழுது போக் கும் பொது மக் கள் விசு வக் குடி கல் லாறு அணைக் கட் டுக் குச் செல் வார் கள் என எதிர் பார்க் கப் ப டு கி றது. இது கு றித்து பொதுப் ப ணித் து றை யின் உதவி செயற் பொ றி யா ளர் வேல் மு ரு கன் தெரி வித் தி ருப் ப தா வது :
பொதுப் ப ணித் துறை சார் பாக அணைக் கட் டுக்கு போலீஸ் பாது காப்பு போடப் பட் டுள் ளது. பொதுப் ப ணித் துறை பணி யா ளர் க ளும் பாது காப் புப் பணி க ளில் ஈடு ப டுத் தப் பட் டுள் ள னர். அதோடு அணையை கண்டு ரசிக் கவே பொது மக் க ளுக் கும், சுற் று லாப் பய ணி க ளுக் கும் அனு மதி அளிக் கப் பட்டு வரு கி றது. குளிப் ப தற்கு அனு மதி கிடை யாது என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-