அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மக்கா 26ஆகஸ்ட்,

முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வழக்கமாக தவாஃப் செய்யும் பகுதியில் ஹஜ் காலம் முடியும்வரை தொழுகைக்கு அனுமதி இல்லை.

மக்கா பிரதேச கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் அவர்களின் உத்தரவின்படி, ஹஜ் யாத்ரீகர்கள் சங்கடங்கள் இன்றி வசதியாக தவாப் செய்திடும் வகையில் (ஆகஸ்ட் 25) முதல் ஹஜ் காலம் முடியும் வரை, புனித மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதியில் மட்டும் தொழுகைக்கான அனுமதி கிடையாது.

ஹஜ் யாத்ரீகர்களும் இன்ன பிறரும் பள்ளியின் உள் வளாகங்களிலும், மாடிகளிலும், சுற்றுப்புறங்களிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதே உத்தரவு புனித ரமலான் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- நன்றி: அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-