அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருவனந்தபுரத்தில் சென்ற விமானம் தரையில் மோதிய விபத்தால் பாதிக்கப்பட்ட துபாய் விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


துபாய்:

திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 3-ந்தேதி துபாய் சென்ற விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் இருந்த 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் கடுமையான பாதிப்பிற்குள்ளான துபாய் விமான நிலையம், அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது. 29 மணிநேரத்திற்கு பிறகு இரண்டு ஓடுதளங்களில் இருந்து மட்டும முன்னுரிமை அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டன.

24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் துபாய் விமான நிலையத்திலிருந்து சுமார் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாயின. இதனால், கடந்த மூன்று நாட்களாக அங்கு பெரும்பாலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக விமான நிலைய ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று துபாய் விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும், விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-