அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...:
துபாய், ஆகஸ்ட் 19
சுரூக் (Shurooq) என்றழைக்கபடுகின்ற ஷார்ஜா முதலீடு மற்றும் வளர்ச்சி ஆணையம் (Sharjah Investments & Development Authirity) சார்பில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் சக்தி (EV - Electric Vehicle) இயங்கும் வாகனங்களுக்கான மின் சக்தி மீள்நிரப்பு மையம் (Recharge Stations) ஷார்ஜாவின் அல் கஸ்பா பகுதியில் இரு இடங்களில் முதன்முறையாக திறக்கப்பட்டது.

துபாய் DEWA (மின்சார வாரியம்) & RTA (போக்குவரத்துத் துறை) ஒத்துழைப்பின் கீழ் அமீரகத்திலேயே முதன்முதலாக துபாயின் பல்வேறு பகுதியிலும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ள இதுபோன்ற ரீசார்ஜ் மையங்களில் ஹைப்ரீட் வகை கார்களுக்கான மின் சக்தி சேமிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜாவில் இதுபோல் பல்வேறு இடங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுச்சூழலுக்கு ஏதுவான மின் வாகன ரீசார்ஜ் மையங்கள் (EV Recharge Stations) குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 2 புதிய BMW - i8 மின்சக்தி கார்கள் இத்தகைய மையங்களில் நிறுத்தப்பட்டு ரீசார்ஜ் செய்யும் உத்திகள் கற்றுத் தரப்படுகின்றன.

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-