அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பேஸ்புக்கில் அவ்வப்போது புதிய பல ஜாலங்கள் நடந்து வருவதை நாம் அறிவோம். பல புதிய அப்ளிகேசன்கள் தோன்றி.. நீங்கள் எதற்கு தகுதியானவர்?? உங்கள் அமைச்சரவை சகாக்கள் யார்??? என்பதாக உங்களை குஷிப்படுத்தும் வேலையை அவ்வப்போது செய்து வருகின்றன.

இந்த அப்ளிகேசன்களில் நுழைய நமது பேஸ்புக் username & Password உள்ளிட்ட விவரங்களை அங்கு பதிய வேண்டியிருக்கிறது. நாமும் ஆர்வத்துடன் அவற்றை அந்த அப்ளிகேசன்களுக்கு வழங்கி, அது தரும் தகவல்களை பதிவட்டு மகிழ்கிறோம்.
இங்கே தான் நாம் தவறிழைக்கிறோம்.

மூன்றாவது தரப்பு அப்ளிகேசன்களிடம் நமது பேஸ்புக் கணக்கின் விபரங்களை தருவதன் மூலமாக எதிர்காலத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். டைம்லைன்களில் அல்லது இன்பாக்ஸில் நமக்கே தெரியாமல் அருவருக்கத்தக்க ஆபாச வீடியோக்கள் திடீரென தோன்றி நம்மில் பலரை நிலை குலைய செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.

நட்புப் பட்டியலில் இருப்போர் அதனை காணும் வேளையில் யாருடைய ஐடியில் அவை காணப்படுகிறதோ அவர்களை தவறாக கருதும் நிலை ஏற்படும் நிலை உருவாகிறது. மேலும் அந்த வீடியோக்களை தவறுதலாக யாராவது க்ளிக் செய்தால் அது அவரது ஐடியிலும் போஸ்ட் ஆகி விடும்.

பலரது நிம்மதியை குலைக்கும் இத்தகைய Auto Spam வகை ஆபாச வீடியோக்கள் நம்மையறியாமலேயே நமது ஐடியில் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவை இத்தகைய மூன்றாந்தர அப்ளிகேசன்கள் தாம். அத்தகைய அப்ளிகேசன்களுக்கு எப்போதாவது நமது பேஸ்புக் கணக்கின் Access ஐ வழங்குவதன் மூலம் இத்தகைய இம்சைகளை நாம் அனுபவிக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட அப்ளிகேசன்களின் வலைகளில் சிக்காமல் நமது ஐடி யை காப்போம்.

ஒரு வேளை இத்தகைய unknown appகளில் நீங்கள் உங்கள் விபரங்களை கொடுத்திருந்தால் கவலை வேண்டாம்.

பேஸ்புக்கில் setting> Account setting> சென்று apps பகுதியை திறந்தால். இது வரை நீங்கள் Access கொடுத்துள்ள அப்ளிகேசன்களது பட்டியல் அங்கே உங்களுக்கு காட்டிப்படும். அவற்றை உடனே Remove செய்து Save செய்வதின் மூலம் உங்கள் ஐடியை காக்க முடியும்.

-RIFAI

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-