அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய் : விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் ஏகே521 விமானத்தில் 282 விமானிகளும் 18 ஊழியர்கள் இருந்ததாகவும், இவர்களில் 226 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது குறித்து உடனடியாக உதவும் நடவடிக்கையில் இறங்கிய துபாய் இந்திய துணை தூதரகம் அதன் சார்பில் துணை தூதர் அனுராக் பூசன் தலைமையில் தூதரக அதிகாரிகள் விமான விபத்திலிருந்து காப்பற்றப்பட்ட இந்தியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை மற்றும் உரிய அதிகாரிகளையும் சந்தித்தனர்.

அதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பாக தெரிவித்ததோடு விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்த இந்தியர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மிக சிறப்பாக செயல்பட்டு விமான குழுவினர் பயணிகளை பத்திரமாக காப்பற்றியதோடு அவர்களுக்கு உறுதுணையாக இருந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் விமான நிலையத்தாருக்கும் இந்திய துணை தூதரகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல்களை பெற அவசர கால எண்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-