அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் பெல்லட் குண்டுகளால் பாதிகப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

மதுரையை சேர்ந்த கண் மருத்துவர் #நடராஜன், அதித்யா ஜோய்ட் கண் மருத்துவமனை மும்பையில் நடத்தி வருகிறார், Borderless World Foundation என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் இவருடன் இரண்டு கண் மருத்துவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை(26\07\16) அன்று காஷ்மீர் அழைத்து சென்றது.

அழைப்பை உடனடியாக ஏற்று காஷ்மீர் புறப்பட்டுள்ளார், மேலும் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்ய முன் வந்துள்ளார் மருத்துவர் நடராஜன்.

காஷ்மீர் SMHS மருத்துவமனை சென்ற மருத்துவர் நடராஜன் பெல்லட் குண்டுகளால் பாதிகப்பட்டவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார், என் வாழ்நாளில் இதுபோன்ற கோரமான முறையில் பாதிக்கப்பட்டவர்களை கண்டது இல்லை என்றார்.

190 வாலிபர்களின் கண் பாதிகப்பட்டுள்ளது, 140 பேர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது, இவர்களில் 40 பேர்களுக்கு கடந்த மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குறைந்த காலகட்டத்தில் 140 பேர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து வருவது சிக்கலானது, SMHS மருத்துவமனை ஊழியர்கள் மிகப்பெரிய தியாகங்களுக்கு மத்தியில் சேவை செய்வது மிகவும் பாராட்டுக்குரியது.

அறுவை சிகிச்சைக்கு தேவையான ஜெர்மனி தயாரிப்பு BIOM லென்ஸ்கள் மிகவும் குறைவாக உள்ளது, கடந்த வியாழக்கிழமை 20 லட்சம் மதிப்பில் BIOM லென்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, நாள் ஒன்றுக்கு இரண்டு பேர்களுக்கு விதம் கண் பகுதியில் உள்ள ரெட்டினாவில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம், சராசரியாக ஒரு வருடம் ஆகும் குணம் அடைய, இவ்வாறு  மருத்துவர் நடராஜன் tribune பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

லிங்க் கீழே 👇👇👇
http://www.tribuneindia.com/mobi/news/jammu-kashmir/chennai-surgeon-comes-to-aid-of-pellet-victims/272662.html

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-