அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஆகஸ்ட் 23
அமீரகத்தில் கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த வெயில் தற்போது சுமார் 7 மாத கால நீண்ட விடுமுறையில் செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமீரக தேசிய வளிமண்டலவியல் மற்றும் நிலநடுக்கவியல் துறை எனும் வானிலை மையத்தின் அறிவித்தலின்படி, இனி அமீரகத்தில் வெயிலின் உக்கிரம் படிப்படியாக குறைந்து விரைவில் விடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் நிலவிய சுமார் 40 டிகிரி செல்சியஸ் முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை நிலவிய வெப்பம் வரும் நாட்களில் சுமார் 35 டிகிரியிலிருந்து 45 டிகிரி வரை மட்டுமே நிலவும். ஒரு சில பாலைவன பிரதேசங்களில் மட்டும் 47 டிகிரி வரை நிலவ வாய்ப்புண்டு.

அதேபோல் வறண்ட வானிலையும் சுமார் 70 சதவிகிதம் குறைவதால் புழுக்கமும் குறையவுள்ளது என்றாலும் இவை கடற்கரை பிரதேசங்களில் மட்டும் 90 முதல் 95 சதவிகிதம் வரை அதிகரித்து காணப்படும்.

எதிர்வரும் 3 நாட்களில் ஓரளவு சூடு தணிந்து காணப்படும் இரவு நேரங்களில் மிதமான காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாடி! செப்டம்பர் மாத மத்தியிலிருந்து ஏப்ரல் மாத மத்தி வரை கொளுத்தும் வெயிலுக்கு லீவு தான். அதற்கப்புறம் 'நான் அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லுன்னு' சினிமா வசனம் பேசும்.

Source: Gulf News
தமிழில்: 

 அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-