அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பசுமை போர்த்திய கேரளா மாநிலத்தை 'கடவுளின் தேசம்' (God's Own Country) என மலையாளிகள் தற்பெருமை பேசுவதை பார்த்திருப்போம், இதையே செயற்கையாய் விளைத்திட துபை உட்பட பல அரபு நாடுகள் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருவதையும் நிதர்சனமாய் பார்த்து வருகிறோம் ஆனால் இப்படி எத்ததைய முயற்சியுமின்றி, செலவுமின்றி கேரளாவின் சிறுபகுதியை பெயர்த்தெடுத்து பொருத்தியது போல் அதே இயற்கை பசுமை சுகத்தை தன்னகத்தே சுமந்துள்ளதென்றால் நம்ப முடிகிறதா?

ஆம், ஓமனின் 'சலாலா' (Salalah) எனும் இயற்கை மலைப் பிரதேசமே அது. நல்ல கன்டிஷனில் சொந்த வாகனம் வைத்திருப்போர் அல்லது விமானத்தில் சென்று வர வசதியுடையோர் எதிர்வரும் ஹஜ் பெருநாள் விடுமுறையில் சென்று வர அற்புதமானதொரு சுற்றுலாத்தலம்.

என்ன நண்பர்களே! குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் செல்ல ரெடியா? மறக்காமல் உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லுங்கள், எல்லையில் விசா கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க!

இதோ உங்களுக்காக சில படங்கள்...குறிப்பு: இந்திய மன்னர்களில் இஸ்லாத்தை முதன்முதலில் தழுவிய, இந்தியாவில் முதல் மஸ்ஜிதை கட்ட உத்தரவிட்ட, நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்ததாக நம்பப்படும் மன்னர் சேரமான் பெருமாள், நபி (ஸல்) அவர்களை சந்தித்துவிட்டு மீண்டும் கேரளா திரும்பும் வழியில் உடல் சுகவீனமற்று மரணிக்க, இதே சலாலாவில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். (தகவல்: CMN சலீம் அவர்கள்)

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: ஆகஸ்ட் 30நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-