அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஷார்ஜா, ஆக்ஸ்ட் 10
ஷார்ஜா மாநகராட்சியின் அனுமதி பெறாமல் நடத்தப்பெறும் கார் நிறுத்தங்களை (Car Parking) நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் இது தொடர்பான தொடர் சோதனைகள் நடைபெறும் என்றும் இன்ஸ்டாகிராம் வழியாக விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷார்ஜா மாநகராட்சியின் அனுமதியுடன் நடத்தப்பெறும் தனியார் கார் நிறுத்தங்களில் அதற்கான மாநகராட்சியின் அனுமதி குறித்த விபரங்கள், மாநகராட்சியின் சின்னம், உரிமையாளரின் விபரம் மற்றும் கட்டணம் குறித்தும் அறிவிப்பு பலகையில் இடம் பெறும். இத்தகைய கார் நிறுத்தங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்வர் எனவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படியும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: அதிரை நியூஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-