அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, ஆகஸ்ட் 22
நிழல்கள் 'ஹீரோ'க்களாக சர்வதேச விருதுகள் மூலம் கவுரவிக்கப்படும் இக்காலத்தில் அரிதாய் 'நிஜ ஹீரோ'க்களும் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வரத் தவறுவதில்லை அப்படி தன்னுயிரை பணயம் வைத்து சாகசம் நிகழ்த்திய அந்த சவூதி இளைஞர் பெயர் ராஷித் அல் நஃபி (Rashid Al Nafii).

சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து சுமார் 280 கி.மீ. தூரத்திலுள்ள சிறுநகரம் அல் ஜூல்ஃபி (Al Zulfi). இங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பபற்றிக்கொள்ள, இவற்றை அணைக்கும் முயற்சிகள் தோற்றன.

இந்தப் பதட்டமான நிலையில், எரியும் காரை துணிச்சலுடன் கயிரை கட்டி இழுத்து அப்புறப்படுத்தியதால் நிகழவிருந்த உயிர்ச்சேதமும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டன. பின்பு தீயணைப்புத் துறை வந்து முழுமையாக தீயை அணைத்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

ராஷித் அல் நஃபியின் இந்த துணிச்சலான, விவேகமான செயல்பாடு அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிய, பதிவுகள் வழமைபோல் சமூக ஊடகங்களில் புயலாய் பரவ, பட்டத்து இளவரசர் முஹமது பின் நாயிஃப் அவர்களால் ரொக்கப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார் அந்த நிஜ ஹீரோ என சவூதி அல் ஜஸீரா தினசரி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-