அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவை விடவும் உலகில் அதிக எண்ணெய் கையிருப்பு உள்ள நாடாக அமெரிக்கா முதல்முறை இடம்பிடித்துள்ளது.


எண்ணெய் மற்றும் எரிவாயு சேவை நிறுவனமான ரைஸ்டட் எனர்ஜி, வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கை ஒன்றில், அமெரிக்காவிடம் நம்பமுடியாத அளவுக்கு 264 பில்லியன் பீப்பாய் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இது ரஷ்யாவிடம் கையிருப்பில் இருக்கும் 256 பில்லியன் பீப்பாய்கள் மற்றும் சவூதி அரேபியாவிடம் இருக்கும் 212 பில்லியன் பீப்பாய்களை விஞ்சுவதாக உள்ளது.


இதன்படி சர்வதேச அளவில் உள்ள மொத்த எண்ணெய் கையிருப்பு 2,092 பில்லியன் பீப்பாய் என்று இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய உற்பத்து வீதத்தின் 70 மடங்காகும். தற்போது ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-