அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூத் அரேபியா, ஆகஸ்ட் 28
சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினரும், சவூதி நாட்டவர்களும் முறையான முன் அனுமதி பெற்ற ஆவணங்கள் இல்லாமல் ஹஜ் செய்தால் தண்டனைக்குள்ளாக்கப்படுவர். ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்வோரால் பல்வேறு சங்கடங்களை சந்திப்பதுடன், கூடாரங்களின் நகரான 'மினா'வில் இவர்கள் சாலை ஓரங்களிலும் கூடார பாதைகளுக்கு மத்தியிலும் ஆக்கிரமிப்பு செய்வதால் சாலை போக்குவரத்திற்கும், பிற ஹஜ் யாத்ரீகர்களுக்கும் தொல்லையாக இருக்கின்றனர்.

எனவே, இனி முறையான முன் அனுமதி ஆவணங்களின்றி ஹஜ் செய்வோர் நாடு கடத்தப்படுவதுடன் 10 வருடங்களுக்கு சவூதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்படுவர். இதுவே சவூதி நாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அபராதம் செலுத்தவோ அல்லது சிறைப்படுத்தவோபடுவர் அல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும் என சவூதியின் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சவூதியின் ஜித்தா உட்பட அனைத்து பெரிய நகரங்களிலும்“No Permit, No Haj” என்ற எச்சரிக்கை விளம்பரப் பலகையும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டுகளில் உள்நாட்டு ஹஜ்ஜூக்காக செலவிட்ட 8000 ரியால் போன்றல்லாமல் இந்த வருடம் 3000 ரியால்களிலிலேயே ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும், ஹஜ்ஜூக்கான விண்ணப்பங்களை அரபியிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து அனுப்பி முன் அனுமதி பெற முடியும் என்பதால் ஹஜ் செல்ல விரும்பவோர் முறையான முன் அனுமதியுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி மருத்துவ வழிகாட்டல்கள் !

 சவூதி அரேபியா, ஆகஸ்ட் 28
தொடர்ந்து 12வது வருடமாக, சவூதியின் சுகாதார அமைச்சகம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன் தொலைபேசி வழியாக மருத்துவ உதவிகள் கோருவோருக்கு ஆலோசணைகள் வழங்கி வருகிறது.

அதன்படி, தினமும் பகல் 1 மணி முதல் 3 வரை சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்துறை சிறப்பு மருத்துவர்கள் வழங்கவுள்ளனர். இந்த சேவை எதிர்வரும் 01.09.2016 வரை நீடிக்கும்.

மேலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான மருத்துவ ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களைtoll-free number: 8002494444 and through the MoH’s account on Twitter: @saudimoh ஆகியவற்றின் வழியாக தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசணைகளை பெற்றுக் கொள்ளலாம்.
Source: Arab News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-