காஷ்மீரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது - அகில உலக இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு....!!
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் அறங்கேறியுள்ளதாக 57 முஸ்லிம் நாடுகள் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமீன் மதானி கூறுகையில்.
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கான உள்நாட்டு பிரச்சினை அல்ல, காஷ்மீரில் வன்முறை வெறியாட்டம் தாண்டவமாடப்பட்டு சர்வதேச மனித உரிமை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
காஷ்மீர் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தலையிட்டு ஐ.நா சபை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அமீன் மதானி கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.